சுஷாந்தின் பெண் மேனேஜர் வயிற்றில் பிரபல நடிகரின் குழந்தையா? அதிர்ச்சி தகவல்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பாலிவுட் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதேசமயம் அவரது மன அழுத்தத்திற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் தான் காரணம் என்றும் கூறப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன் அவரது முன்னாள் பெண் மேனேஜர் திஷா சாலியன் என்பவர் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவருடைய வருங்கால கணவரும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் ஒரு வதந்தி உலாவி வருகிறது. சுஷாந்தின் பெண் முன்னாள் மேனேஜர் திஷா தற்கொலை செய்து கொண்டபோது அவர் கர்ப்பமாக இருந்ததாகவும், அவரது கர்ப்பத்திற்கு காரணம் பிரபல நடிகர் சூரஜ் பஞ்சாலி தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் சுஷாந்துக்கு தெரியும் என்பதால் அவர் இந்த தகவலை சரியான நேரத்தில் வெளியிட காத்திருந்ததாகவும் ஆனால் அவரை சூரஜ் பஞ்சோலி மிரட்டியதாகவும் இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் சுஷாந்த் தற்கொலை செய்ய காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சூரஜ் பஞ்சோலி சமீபத்தில் பேட்டியளித்த போது ’திஷா தற்கொலைக்கு பின்னரே அவர் யார் என்பது தனக்கு தெரியும் என்றும் அதற்கு முன்னர் திஷா யார் என்றே எனக்கு தெரியாது என்பதும் என்றும் அவரை இதுவரை நான் பார்த்ததே இல்லை என்றும் கூறினார். மேலும் சுஷாந்துக்கும் தனக்கும் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும் இது குறித்து வெளியாகும் அனைத்து தகவல்களும் வதந்தி என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். சூரஜ் பஞ்சோலியின் விளக்கத்திற்கு பின்னர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.