வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். சாவகச்சேரியில் நால்வருக்கும், பருத்தித்துறையில் 2 பேருக்கும் தெல்லிப்பழையில் இருவருக்கும் சண்டிலிப்பாயில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கு தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.