மாவை அண்ணன் நேர்மையானவர்: புகழாரம் சூடிய கருணா!
தமிழ் தேசிய கூட்டமைப்பில் மாவை அண்ணன் மாத்திரமே நேர்தன்மையுடன் செயற்படுபவரென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழர் மகா சபையின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காரைதீவில் கட்சியின் பணிமனையை திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவன் நானே. ஆனால் சம்பந்தன் ஐயா "அப்படி இல்லை " என கூறுகிறார்.
உண்மையில் அக்கட்சி உருவாக்கத்தின் போது அருகில் நானிருந்தேன். இன்றும் உயிருடன் இருக்கிறேன். இதனை எப்படி மறைப்பது?
தமிழ் தேசிய கூட்டமைப்பில் நல்ல தலைவர்கள் இருந்தனர். ஆனால் மாவை அண்ணன் மாத்திரம் அதில் நேர் வழியில் செயல்படுகிறார். இன்று மாவை அண்ணனை தவிர தரமான தலைவர்கள் அக்கட்சியில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.