தான்சானியா தேசிய நாள்: ஏப்ரல் 26, 1964

தன்சானியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது. இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

தன்சானியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.

இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

 


1996 இல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் தாருஸ்ஸலாமில் இருந்து டொடோமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது. தாருஸ்ஸலாம் வணிகத் தலைநகராக உள்ளது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1564 - ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஜேக்ஸ்பியர் பிறந்த தினம்

* 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.

* 1962 - நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.

* 1981 - மட்டக்களப்பில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1986 - உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

* 1994 - ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.