
முற்றிலும் கழிவுப்பொருட்களை கொண்டு வவுனியா இளைஞன் உருவாக்கிய மாதிரிக்கார்
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வசித்து வரும் பா.யுவிகன் என்ற இளைஞன் பார்முலா என்ற மாதிரி பந்தயக்கார் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
முற்றிலும் கழிவுப் பொருட்களை கொண்டு குறித்த மாதிரிக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித பொருளாதார பின்னணியும் இல்லாமல் கூலித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட அவர் தனது வேலை முடிந்து கிடைக்கும் நேரங்களில் குறித்த மாதிரிகாரை உருவாக்கி அதை பரீட்சித்துப்பார்த்து வெற்றி அடைந்துள்ளார்.