வவுனியாவில் கோர விபத்து! 9 வயதுச் சிறுமி பலி - இருவர் படுகாயம்
வவுனியா - இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சிறுமி தனது தாயுடன் சிதம்பரபுரம் வைத்தியசாலைக்குச் சென்று மருந்து எடுத்துவிட்டு, கல்குண்ணாமடுப் பகுதியில் உள்ள அவரது வீடுநோக்கிச் செல்லும்போது, எதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கல்குண்ணாமடுப் பகுதியைச் சேர்ந்த ஆகாசா ரசினி என்ற 9 வயதுச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.