
வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நகர்ப் புறங்களில் மலேரியா நோயை பரப்பும் ஒரு புதிய வகை நுளம்பு வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவி பேராசிரியர் அனுலா விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா நோயற்ற நாடாக உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த நோய் மீண்டும் நாட்டில் தலையெடுக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.