மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் காலமானார்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் காலமானார்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு என அழைக்கப்படும் ஆசிர்வாதம் சந்தியோகு தனது 66 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே அவர் இன்று காலமானார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாந்தை மேற்கு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Gallery