
யாழில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு ஏற்பட்ட துயரம்
யாழ்ப்பாணம் - அரியாலை - நாவலடி, குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.