இரண்டு மாகாணங்களில் கொரோனா பரவல் அபாய நிலை (காணொளி)

இரண்டு மாகாணங்களில் கொரோனா பரவல் அபாய நிலை (காணொளி)

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில், கொரோனா பரவல் அபாய நிலை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தொற்றுறுதியான ஒருவரிடமிருந்து, வைரஸ் பரவக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் கொவிட்-19 தொற்றுறுதியான 969 பேரில், குருணாகல் மாவட்டத்திலேயே அதிகளவானோர் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின், நாளாந்த அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குருணாகல் மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் 251 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 236 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 194 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 48 பேருக்கும், காலி மாவட்டத்தில் 36 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 28 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 26 பேருக்கும், அனுராதபுரம் மாவட்டத்தில் 23 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 20 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 12 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 11 பேருக்கும், மொனராகலை மாவட்டத்தில் 10 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 8 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 7 பேருக்கும், கேகாலை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் தலா மூன்று பேருக்கும், பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா இருவருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.