யாழில் வாள்களை காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது

யாழில் வாள்களை காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 18 பவுண் நகைகள், பணம் மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றட்டன. அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர் ஒருவரின் வீட்டுக்குள் சமையல் அறை புகைக் கூண்டு ஊடாக நுழைந்த கொள்ளையர்கள் வாள்களைக் காண்பித்து மிரட்டி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்தனர்.

அந்த கொள்ளை உள்பட கந்தரோடை, நல்லூர், கந்தர்மடம் என நான்கு இடங்களில் முதியவர்களை மிரட்டி கொள்ளையிட்ட கும்பலின் பிரதான சந்தேக நபரே கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் நல்லூரைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன். அவரிடமிருந்து கொள்ளையிட்ட நகைகளை வாங்கியமை, விற்றுக் கொடுத்தமை மற்றும் அடகு பிடித்தனர் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தே நபர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணி இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

 

 

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery