ஸ்ரீலங்காவில் யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கைப் பார்த்து மிரண்டு போன அதிகாரிகள்

ஸ்ரீலங்காவில் யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கைப் பார்த்து மிரண்டு போன அதிகாரிகள்

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் இருப்பதைப்பார்த்து அதிகாரிகள் மிரண்டு போயுள்ளனர்.

கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளரான மர்வின் ஜானா என்பவருக்கு சொந்தமான பணமே இவ்வாறு யாசகரின் வங்கி கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது.

இந்த யாசகரின் பெயரில் அத்திட்டிய தனியார் வங்கி ஒன்றில் கணக்கு திறந்து பணம் வைக்கப்பட்டுள்ளது.

வங்கி புத்தகம் மற்றும் வங்கி அட்டை மர்வினின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாசகரின் கணக்கில் கடந்த 11 மாதங்களில் 1400 இலட்சம் ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளமை பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, மர்வின் ஜானா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.