சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் - நிமல் சிறிபால டி சில்வா

சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் - நிமல் சிறிபால டி சில்வா

சவூதி அரேபியாவில் தடுப்பு முகாமில் உள்ள இலங்கை பெண்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இப்பெண்களை விடுதலை செய்வதற்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் சவூதி அரேபிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய அவர்களை சவூதி அரேபியா விமான சேவை மூலம் நாட்டுக்கு அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

அதற்கமைய, 156 இலங்கை பெண்கள் நாட்டுக்கு மீள அழைத்து வரப்படவுள்ளனர் எனவும் தெரிவித்தார்