தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு 4 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்காத 4 அரசியல் கட்சிகள் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் பல தடவைகள் கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படியாக குறித்த அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
இதனடிப்படையில், நாளைய தினம் கண்காய்வு அறிக்கைகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமுகமளிக்குமாறு அக்கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்