வெளிநாட்டு பட்டதாரி நிறுவகம் தொடர்பான ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

வெளிநாட்டு பட்டதாரி நிறுவகம் தொடர்பான ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை மருத்துவ சபையின் வெளிநாட்டு பட்டதாரி நிறுவகம் தொடர்பான ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி காவல்துறைமா அதிபரிடம் முறைப்பாடு பதிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தி பெறாதவர்கள் மாத்திரமின்றி, பரீட்சையில் தோற்றாத நபர்கள் இலங்கை மருத்துவ சபை ஊடாக வைத்தியர்களாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது