பூநகரியில் மற்றுமொரு கோர விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!

பூநகரியில் மற்றுமொரு கோர விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் வியாபார நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட முச்சக்கர மோட்டார் சைக்கிள் வாகனம் குறித்த விபத்தில் தீக்கிரையாகியுள்ளது.

டிப்பர் வாகனத்துடன் மோதுண்ட குறித்த மோட்டார் வாகனம் அந்த வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பூநகரி பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.