வாகன விபத்துக்களினால் 75 பேர் மரணம்

வாகன விபத்துக்களினால் 75 பேர் மரணம்

கடந்த ஒருவார காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 75 பேர் மரணித்தனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் ஆயிரம் பேரளவில் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், வாகன சாரதிகள், உந்துருளி மற்றும் ஈருருளி செலுத்துநர்கள், பாதசாரிகள் ஆகியோர் வீதி விதிமுறைகள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறை பேச்சாளர் கோரியுள்ளார்