இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் அபாயம்!

இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் அபாயம்!

கொவிட்-19 தொற்றுறுதியானவர்களை அடையாளம் காண்பதற்காக இன்று (20) முதல் மீண்டும் எழுமாறான பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதார தரப்பு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பரிசோதனைகளின் போது 18 பேருக்கு கொவிட் தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் தடுப்பு விசேட நிபுணர் வைத்தியர் தினுகா குருகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொரோனா மூன்றாம் அலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி, தொற்று பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளார்