காட்டு யானை தாக்கி இருவர் மரணம்

காட்டு யானை தாக்கி இருவர் மரணம்

வவுனியா - செட்டிகுளம் - கப்பாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் மரணித்தார்.

கப்பாச்சி பகுதியில் உள்ள வயல்காணிக்கு குறித்த நபர் காவலுக்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் சின்ன சிப்பிகுளம் பகுதியை சேர்ந்த 43 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே மரணித்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் மெதிரிகிரிய பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் மரணித்தார்.

58 வயதான 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கட்டுயானை பிரச்சினைக்கு தீர்வைப் பெற்று தருமாறு கோரி மஹியங்கனை மற்றும் வல்சபுகல பகுதியை சேர்ந்த மக்கள் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

மஹியங்கனை மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் 35 ஆவது நாளாகவும் வல்சபுகல மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் 94வது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.