வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவல்! ஒருவர் அதிரடியாகக் கைது

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவல்! ஒருவர் அதிரடியாகக் கைது

வட்டக்கச்சி புதுக்காட்டு பகுதியின் காட்டில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி உயிருடன் இறைச்சியாக்குவதற்கு தயாராக வைத்திருந்திருந்த நிலையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீட்டினை சோதனையிட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் குறித்த ஐந்து உடும்புகளை மீட்டுள்ளனர்.

இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் ஐந்தாம் மாதம் 10ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த உடும்புகளை வனத்தில் விடுமாறும் பணித்திருந்தார். அதற்கமைய குறித்த உடும்புகள் சுண்டிக்குளம் சரணாலயத்தில் இன்று பிற்பகல் விடப்பட்டது. 

Gallery Gallery Gallery Gallery