கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்

நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கொவிட்-19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 70 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 63 பேரும், குருநாகலில் 50 பேரும், கம்பஹாவில் 41 பேரும், புத்தளத்தில் 30 பேரும் அடையாளங் காணப்பட்டனர்.

குருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 50 கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் 40 பேர் குளியாப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர்