தொல்பொருள் முக்கியத்துவமுள்ள பகுதிகள் தொடர்பில் தெளிவூட்டுவதற்கு தொடர் கருத்தரங்குகளை நடத்த தீர்மானம்

தொல்பொருள் முக்கியத்துவமுள்ள பகுதிகள் தொடர்பில் தெளிவூட்டுவதற்கு தொடர் கருத்தரங்குகளை நடத்த தீர்மானம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவமுள்ள பகுதிகள் தொடர்பில் பிரதேச மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான தொடர் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் முதல்கட்டம் மட்டக்களப்பில் நாளைய தினம் நடத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கலாசார திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவ முகாம்களில் உள்ள பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொல்பொருள் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு தவறான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

அதனைத் தெளிவுப்படுத்துவதுடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் இதன்போது, மக்களுக்கு தெளிப்படுத்தல்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்