நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதியில் இன்று மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களின் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.

அத்துடன் மின்னல் தாக்கம் தொடர்பிலும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது