
இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்புக்கு ஆளான 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேரில் 10 மாநிலங்கள் 78.56 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்புக்கு ஆளான 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேரில் 10 மாநிலங்கள் 78.56 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஷ்கார், கர்நாடகம், மத்திய பிரதேசம், கேரளா, குஜராத், தமிழகம், ராஜஸ்தான் ஆகியவை அந்த 10 மாநிலங்கள் ஆகும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 நாளில் இரட்டிப்பு ஆகி உள்ளது. இது 8 சதவீதத்தில் இருந்து 16.69 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
வாராந்திர பாதிப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் சத்தீஷ்காரில் அதிகபட்சமாக 30.38 சதவீதமாக உள்ளது. இது கோவாவில் இது 24.24 சதவீதம் ஆகும். மேலும் மராட்டியத்தில் 24.17 சதவீதம், ராஜஸ்தானில் 23.33 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 18.99 சதவீதம் என பாதிப்பு விகிதம் பதிவாகி இருக்கிறது.
கொரோனாவால் நேற்று பலியான 1,501 பேரில் 10 மாநிலங்ளை சேர்ந்தவர்கள் 82.94 சதவீதத்தினர் ஆவார்கள்.