மீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தது.

மீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தது.

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அமைந்துள்ள மீனவ வாடியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்தி வெட்டில் முடிவடைந்துள்ளது.

17.04.21 நேற்று மாலை நாயாற்று வாடிப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தளம்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் வாடி அமைத்து தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களில் புத்தளம் கலாவத்தை பகுதியைச் சேர்ந்த 41 அகவையுடைய மீனவர் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கத்தியால் வெட்டிய குற்றவாளியான மன்னாரை சேர்ந்த நபரை முல்லைத்தீவு பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரரணகளை மேற்கொண்டுவருவதுடன் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்கள் இருவரும் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.