வவுனியா சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்

வவுனியா சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்

வவுனியா கோவில்குளம் சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தபணிகள் இல்லத்தினால் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர்.

இதன்போது விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டமை அவதானிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

சம்பவத்தில் ராயி செல்வராணி (17வயது) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா கோவில் புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்விகற்று வருவதுடன், இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றமூடாக குறித்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இங்கு 107 பெண்பிள்ளைகள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.