ஹட்டன் போடைஸ் பகுதியில் வெள்ளம் - 50 குடும்பங்கள் பாதிப்பு

ஹட்டன் போடைஸ் பகுதியில் வெள்ளம் - 50 குடும்பங்கள் பாதிப்பு

பலத்த மழை பெய்த காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஹட்டன் - டிக்கோயா போடைஸ் பகுதியில் 50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததன் காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், வெள்ளநீர் வடிந்து சென்றதன் பின்னர் தங்களுடைய சொந்தவீடுகளுக்கு அவர்கள் மீண்டும் திரும்பியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்