நபர் ஒருவரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து!
கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் நாவுல பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை வேளையில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் ரத்தொட பகுதியை சேர்ந்த 39 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்