நாட்டில் நேற்று வாகன விபத்துக்களால் 10 பேர் பலி!

நாட்டில் நேற்று வாகன விபத்துக்களால் 10 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 10 பேர் மரணித்தனர்.

காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 5 பேர் நேற்று (16) இடம்பெற்ற விபத்துகளில் மரணித்தனர்.

ஏனைய ஐந்து பேர், நேற்றைய தினத்திற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில், காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று காலையுடன் நிறைவடைந்த 72 மணித்தியாலங்களில், வாகன விபத்துக்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி 14 பேரும், 15 ஆம் திகதி 16 பேரும், நேற்றைய தினம் 10 பேரும் விபத்துக்களினால் மரணித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்