தெரணியகலை பிரதேச சபை தவிசாளர் கைது!

தெரணியகலை பிரதேச சபை தவிசாளர் கைது!

தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான 477 நீர்மாணிகள் திருடப்பட்டமை தொடர்பில் தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட 98 நீர்மாணிகள், தெரணியகலை பிரதேச சபை தவிசாளரின் பொறுப்பிலிருந்த நிலையில், நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்