
கிளிநொச்சியில் நான்கு மாதக் குழந்தை உயிரிழப்பு!
கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தின் குமுழமுனைப் பகுதியில் நான்கு மாத ஆண் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பால் புரைக்கேறியதால் குழந்தை சிரமப்பட்டதை அடுத்து முழங்காவில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து முழங்காவில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025