நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய இருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய இருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

அனுராதபுரம் - படிகாரமடுவ பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானம் அருந்திய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் நண்பர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்வில் சட்டவிரோத மதுபானம் அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மூவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.