தீபக் சாஹர் அபாரம்: ஷாருக் கான் போராட்டம்- சிஎஸ்கேவுக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு

புதுப்பந்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை தீபக் சாஹர் வெளியேற்ற, ஷாருக் கான் சிறப்பாக விளையாடி 47 அடிக்க சிஎஸ்கே-வுக்கு -- ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

 

மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். கடந்த ஐந்து போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் வீழ்த்த முடியாம திணறிய தீபக் சாஹர் பந்து வீச்சு இன்று தீப்பொறியாக இருந்தது.

 

முதல் ஓவரின் 4-வது பந்தில் மயங்க் அகர்வால் (0), அவரின் 2-வது ஓவரின் 5-வது பந்தில் கேஎல் ராகுல் (5) ரன்அவுட், 3-வது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்ல் (10), 4-வது பந்தில் நிக்கோலஸ் பூரன் (0), 4-வது ஓவரின் 2-வது பந்தில் தீபக் ஹூடா (10) ஆகியோரை வீழ்த்தினார்.

 

 

ஷாருக்கான்

 

இதனால் பங்சாப் அணி 6.2 ஓவரில் 26 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. தீபக் சாஹர் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெடுகள் சாய்த்து, பஞ்சாப் அணியின் சீர்குலைத்தார்.

 

அதில் இருந்து பஞ்சாப் அணியால் மீண்டு வரமுடியவில்லை. ஷாருக் கான் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 106 ரன்களே எடுத்தது.