நாட்டில் நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் குருநாகல் மாவட்டத்தில் பதிவு
நாட்டில் நேற்றைய தினம் தொற்றுறுதியான 212 பேரில் அதிகளவானோர் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அந்த மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக களுத்துறை மாவட்டத்தில் 32 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 31 பேரும் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 3,000,000ஐக் கடந்துள்ளது.
சர்வதேச தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 3,000,243 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது