மதுபோதையில் வாகனம் செலுத்திய 783 பேர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 783 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட காவல்துறை சுற்றிவளைப்புகளில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 783 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரை புத்தாண்டு தினத்தன்று, காலை 9 மணிமுதல் நேற்று காலை 6 மணிவரையில், இந்த விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில், 2,844 சாரதிகளுக்கு எதிராக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேநேரம், 534 உந்துருளிகள், 43 சிற்றூர்ந்துகள், 180 முச்சக்கரவண்டிகள், 2 பேருந்துகள் என்பன காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது