வெலிஓயாவில் நீராடச் சென்று காணாமல்போன இருவரை தேடும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுப்பு
பதுளை - ஹல்தமுல்லை - களுபான - வெலிஓயாவில் நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ள தந்தையையும், மகனையும் தேடும் பணிகள் இன்றும் தொடரவுள்ளன.
மேற்படி பிரதேசத்தில் நேற்றைய தினம் நீராடச் சென்ற நான்கு பேரில், தந்தையும், மகனும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.
இதேநேரம், ஏனைய இரண்டு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
காணாமல்போயுள்ள தந்தை, மகனை தேடும் பணிகள் நேற்று மாலை வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்தநிலையில் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்