சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனால் ரூபா வலுப்பெறாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிப்பு

சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனால் ரூபா வலுப்பெறாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிப்பு

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கிடைத்தாலும் ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கான வலுவான காரணியாக அது அமையாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீன அபிவிருத்தி வங்கியிடம் அரசாங்கம் கோரியிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை நேற்று கிடைத்திருந்தது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 18ஆம் திகதி இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

கடந்த 12ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி 203.73ஆக காணப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.80ஆக குறிப்பிடப்பட்டிருந்தது

அதன் விற்பனைப் பெறுமதி 204.62ஆக பதிவாகியிருந்தது.

சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ள கடன் ஊடாக அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன்களை செலுத்த முடியும்.

அத்துடன் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

எனினும் குறித்த கடன் மூலம் குறைந்த காலத்திற்கே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுக்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்