மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
மட்டக்களப்பு - படுவாங்கரைப் பிரதேசத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலையர்கட்டு கிராமத்தில் இன்று(15) மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அப்பகுதியில் சிறுபோக வேளாண்மைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மும்முரமாக வயலில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று(15) நண்பகல் வரைக்கும் அப்பகுதியில் கடும் உஸ்ணத்துடன் வெயில் காணப்பட்டது.
ஆனாலும் மாலை வேலையில் திடீரென அப்பகுதியில் பலத்த இடி, மின்னல், மற்றும் காற்றுடன் மழை பெய்திருந்தது.
இந்நிலையில் மாலையர்கட்டு கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வயிலில் வேலை செய்து கொண்டிருந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நல்லதம்பி மோகனசுந்தரம் எனும் விவசாயி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி கிராம சேவகர் தெரிவித்தார்.
சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.