டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஹெட்மையர் நீக்கப்பட்டு, ரபடா சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டேவிட் மில்லர் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி அணியில் ஹெட்மையர் நீக்கப்பட்டு, ரபடா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் லலித் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸிற்குப் பதிலாக டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டுள்ளார். உனத்கட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:-
1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ரிஷப் பண்ட், 4. ரகானே, 5. மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், 6. கிறிஸ் வோக்ஸ், 7. அஷ்வின். 8. லலித் யாதவ், 9. ரபடா, 10. டாம் கர்ரன், 11. அவேஷ் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
1. மனன் வோரா, 2 சஞ்சு சாம்சன், 3. டேவிட் மில்லர், 4. பட்லர், 5. ஷிவம் டுபே, 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. கிறிஸ் மோரிஸ், 9. சேத்தன் சகாரியா, 10. உனத்கட், 11. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.