மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தியவாறு, வாகனத்தை செலுத்திய நிலையில் கைதுசெய்யப்படும் சாரதிக்கு, காவல்துறை பிணை வழங்கப்பட மாட்டாது.

அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதுடன், குறித்த வாகனமும் காவல்துறையினால் பொறுப்பேற்கப்படும்.

மதுபோதையில் இருந்த நபருக்கு, வாகனத்தை செலுத்த வழங்கியமை தொடர்பில், குறித்த வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்