நீண்டகால பகை இறுதியில் கொலையில் முடிந்தது!

நீண்டகால பகை இறுதியில் கொலையில் முடிந்தது!

பொல்பிதிகம - தலாதபிட்டி பகுதியில் இரு நபர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் மற்றைய நபரை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே இருந்த நீண்டகால பகைமை மற்றும் மனக்கசப்பு இந்த சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.