'முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை..' வனிதாவின் லேட்டஸ்ட் போஸ்ட்.. வசமாக விளாசும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை வனிதா விஜய்குமார் வெளியிட்டுள்ள புதிய முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் விளாசித் தள்ளியுள்ளனர்
'என் வாழ்க்கை இனி சந்தோஷமா வாழ்ந்து காமிப்பேன்' நடிகை வனிதா விஜயகுமார், திருமணம், விவாகரத்து, குடும்பத் தகராறு என அடிக்கடி பரபரப்பில் இருப்பவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பரபரப்பானார் வனிதா.
திருமணம் விவாகரத்து நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். பின்னர், 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். உடனடியாக ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். பின்னர் 8 ஆண்டுகள் கழித்து தற்போது பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
விஷுவல் எடிட்டர் நடிகை வனிதாவின் யூடியூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த விஷுவல் எடிட்டர்தான் பீட்டர் பால். கடந்த 6 மாதத்துக்கு முன் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்களாம். பின்னர் கோலாகலமாகத் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த திருமணத்தில் முன்னாள் கணவர் ஆகாஷுக்கு பிறந்த ஜோவிதாவும், ஆனந்த் ஜெயராஜனுக்குப் பிறந்த ஜெய்நிதாவும் மணப்பெண்ணின் தோழிகளாக இருந்து அம்மாவின் திருமணத்தை நடத்தி வைத்தனர்
லிப் லாக் முத்தம் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட நடிகை வனிதா, லிப் லாக் முத்தத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினார். திருமணம் முடிந்த மறுநாளே பீட்டர் பாலின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது கணவர் மீது பரபரப்பு புகார் கூறினார்.
இதனால் சமூக வலைத்தளத்தில் நடிகை வனிதாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், வனிதா, ட்விட்டரில் புதிய போட்டோ ஒன்றை இப்போது பதிவிட்டுள்ளார். அதில் அவர் கணவர் பீட்டர் பால், வனிதாவின் நெற்றியில் முத்தமிடுகிறார். இதற்கு கேப்ஷனாக, ராமின் தங்கமீன்கள் படத்தில் இடம்பெறும் கவித்துவமான கேப்ஷனை பயன்படுத்தி இருக்கிறார்.
அப்பாவா அக்கா? அதில், 'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று' என்று கூறியிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக அவரை விளாசித் தள்ளியுள்ளனர். ஒருவர், 'இவரு உங்களுக்கு அப்பாவா அக்கா?' என்று கேட்டு கலாய்த்திருக்கிறார். மத்தவங்க குடும்பத்தை அழிச்சுட்டு நீங்க நிம்மதியா வாழறது சுயநலம் என்று ஒருவர் சாடி இருக்கிறார்.
மரியாதை கொடுங்க இன்னொருவர், இந்த முட்டாள்தனத்தை எல்லாம் விடுங்க, முத்த மேட்டரை தனியா வச்சுக்கோங்க. அவர் மனைவிய நினைச்சுப்பாருங்க. மத்தவங்க மனசுக்கு மரியாதை கொடுக்கணும்' என்று சிலர் விளாசியுள்ளார். இன்னும் சிலர், முத்தம் கொடுக்கறதை பாவம்னு சொல்லல, ஆனா, ஏன் இன்னொரு பெண்ணோட கணவரோடன்னுதான் கேட்கிறோம்' என்று தாளித்திருக்கின்றனர். இன்னும் சிலர் கடுமையாக விளாசியுள்ளனர்.