விறகு வெட்டச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

விறகு வெட்டச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டியநாறு சிப்பிமடு பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற, ஒரு பிள்ளையின் தந்தையான 64 வயதுடைய, சின்னத்துரை சுந்தரலிங்கம் என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

தனது வீட்டிலிருந்து நண்பருடன் கண்டியநாறு சிப்பிமடு பிரதேசத்துக்கு விறகு வெட்டுவதற்கு சென்று இருவரும் அப்பிரதேசத்தில் வெவ்வேறு பக்கமாக விறகு வெட்டுவதற்கு சென்றுள்ளனர்.

யானையின் சத்தம் கேட்டு அவருடன் சென்ற நண்பர் அயலவர்களின் உதவியுடன் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது தனது நண்பர் யானையின் தாக்குதலில் அகப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.