யாழில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

யாழில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

யாழ்ப்பாணம் மாநகர சந்தையுடன் தொடர்புடைய மேலும் 22 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சந்தையிலுள்ள வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 431 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 34 பேருக்கு நேற்று தொற்றுறுதியானது.

அவர்களில் 22 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 12 பேரும் முன்னதாக தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.