
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சகல திரையரங்குகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சகல திரையரங்குகளையும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கொவிட் 19 நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்