இந்தோனேசியாவின் ஜாவா தீவுப் பகுதியில் நில அதிர்வு!
இந்தோனேசியாவின் ஜாவா தீவுப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
அமெரிக்க புவிசரிதவியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் இதுவரையில் அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஜாவாவின் மலாங் நகரிலிருந்து 45 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் எவையும் உடனடியாக வெளிப்படுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன