ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ், 2013-ல் இருந்து தொடர்ந்து முதல் போட்டியில் வெற்றிபெற முடியாத நிலையில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 8 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைசிறந்த அணியாக உள்ளது. அந்த அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
சீசன் தொடங்கும்போது அந்த அணி சிறப்பாக விளையாடாது. சீசன் செல்ல செல்ல விஸ்வரூபம் எடுக்கும். வாழ்வா? சாவா? என வந்தால் நெருக்கடியை சமாளித்து வெற்றி வாகை சூடும்.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 2013-ல் இருந்து முதல் போட்டியை வென்றது கிடையாது. நேற்று ஆர்சிபி-க்கு எதிராக வெற்றி பெற்று அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் தோல்வியடைந்து மோசமான சாதனையை தொடர்கிறது.
2013-ல் ஆர்சிபி, 2014-ல் கொல்கத்தா, 2015-ல் கொல்கத்தா, 2016-ல் ஆர்பிஎஸ், 2017-ல் ஆர்பிஎஸ், 2018-ல் சிஎஸ்கே, 2019-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ், 2020-ல் சிஎஸ்கே, தற்போது ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.