த.தே.கூட்டமைப்பை குற்றம் சாட்டும் சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 5 ஆண்டுகளாக சுயநல அரசியலில் ஈடுபட்டதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாகவே செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தமது தந்தையின் கட்சியி;ல் வியாபார அரசியலை முன்னெடுப்பதற்கு தாம் இடமளிக்க போவதில்லை என எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயட்சையாக போட்டியிடுகின்ற மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.