
சற்றுமுன் விடுதலையானார் மணிவண்ணன்
யாழ். மாநகர சபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் சற்றுமுன் இரண்டு இலட்சம் பெறுமதியான ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் வீ. மணிவண்ணன் சற்றமுன் யாழ். நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மணிவண்ணனுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரன் மற்றும் பல சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.