கரோலின் ஜூரி - சூலா பத்மேந்திர பிணையில் விடுதலை!
திருமதி உலக அழகி (2020) கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோர் காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திருமதி உலக அழகுராணி கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோர் கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.
திருமதி சிறிலங்கா அழகியாக அண்மையில் கிரீடம் சூடிய புஷ்பிகா டி சில்வாவினால் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக இரு தரப்பினரும் இன்று காலை 10 மணியளவில் கறுவாத்தோட்டம் காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்தே, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகிய இருவரும் காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்